technology

img

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களின் வினாடிகள் அதிகரிப்பு!

இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் நீளம் 60 வினாடிகளிலிருந்து தற்போது 90 வினாடிகளாக அதிகரித்துள்ளது.  

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு அப்டேட்டுக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.  

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்ய 60 வினாடிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த கால அளவு 90 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் குறுகிய வீடியோ தளமான ரீல்ஸ்க்கான காலக்கெடுவை நீட்டிப்பது இதுவே முதல்முறையாகும்.  

இதன்மூலம் ரீல்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், இந்த நேர நீட்டிப்பு புதிய வீடியோக்களின் வருகையை முன்பை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.